தோற்று போய் நிற்கும் ஜனனி.! ஜீவானந்தத்தை ஜெயிக்க குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்? வெளியான ப்ரோமோ!
எதிர்நீச்சல் சீரியலில், தோற்று போய் நிற்கும் குணசேகரன்... ஜனனி மூலமாகவே ஜீவானந்தத்திடம் இருந்து 40 சதவீத சொத்தை கைப்பற்ற மாஸ்டர் பிளான் போடும் காட்சி தான் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை, தெரிவிக்கும் விதமாக தற்போது, ஜூலை 24 ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தாவின் சொத்துக்கள், தன்னுடைய கையை விட்டு சென்றதை அறிந்து, விரக்தியிலும்.. ஜீவானந்தத்தின் மீது கடும் கோபத்திலும் உள்ளார் குணசேகரன். ஜனனியாலும் இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், எப்படியும் ஜீவனந்தத்திடம் மோதி... சொத்துக்களை மீட்க வேண்டும் என்கிற என்னத்தோடு, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.
அதே போல் தன்னுடைய உயிர் தோழனான, கெளதம் கூட தனக்கு துரோகம் செய்து விட்டாரே என்றும்... அவர் ஜீவனந்தத்தின் ஆள் என்பதை அறிந்து, மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வருகிறார் ஜனனி. நேற்றைய தினம், ஜீவானந்தத்தின் மீது, புகார் கொடுக்க குணசேகரன் காவல் சென்ற நிலையில், அவருக்கு முன்பே... ஜீவானந்தம் காவல் நிலையத்தில் இருந்தது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டூர் போன இடத்தில் டூபீஸ் போட்டோஷூட்... ‘கண்ணழகி’ பிரியா பிரகாஷ் வாரியரின் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ
ஜீவானந்தம், குணசேகரனை விட சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதால்... நிலைகுலைந்து தன்னுடைய தம்பிகளிடம், சவால் விடும் விதத்தில், ஜனனி மூலமாக போன சொத்துக்கள் ஜனனி மூலமாகவே வர வைக்கிறேன் என கூறுகிறார். ஆடிட்டரும்... உங்கள் வீட்டு பெண்களால் மட்டுமே இந்த சொத்தை மீட்க முடியும் என கூறுகிறார். மற்றொரு புறம் ஜனனி, அப்பத்தாவின் பக்கத்தில் அமர்ந்து... அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்ல அப்பத்தா, நாம ஏமார்ந்து விட்டோம் என கூறுகிறார். குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள், தன்னை பார்த்து பரிதாப படவேண்டும் என காரை விட்டு இறங்கும் போதே... அழுது புலம்பி பர்பாஃமென்ஸை அல்லி வீசுகிறார். எனவே இன்றைய தினம், என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.