மே ஒன்றாம் தேதியான இன்று தல அஜித் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனா தொற்று பிரச்சனை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அஜித் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனால் தான் வலிமை படம் குறித்த அப்டேட் எதையும் இன்று வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கையில் சரக்கு கிளாஸுடன் படு மோசமாக போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி... பொறாமையில் பொங்கும் ‘குடி’மகன்கள்...!

தல அஜித்தை தன்னம்பிக்கையின் மறு உருவமாக பார்பவர்கள் பலர் உண்டு. இந்நிலையில் தல அஜித்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சரண் அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட முக்கியமான தகவல் ஒன்று அஜித் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என மிக முக்கியமான படங்களை கொடுத்தவர். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

காதல் மன்னன் படத்திற்கு பிறகு அடுத்த படம் செய்யலாம் என அஜித்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது முதுகு தண்டில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்த அஜித், மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சரணை பார்த்த அஜித், தன்னால் பேசவே முடியாவிட்டாலும், ஆக்‌ஷன் கதை ஒண்ணு சொன்னீங்களே அதை ரெடி பண்ணுங்க. நான் சீக்கிரம் வந்துடுவேன் என்று நம்பிக்கையுடன் சொல்லி அனுப்பியிருக்கார். அந்த தன்னம்பிக்கைக்கு மற்றொரு பெயர் தான் அஜித் என்றால் அது மிகையாகாது. 

இதையும் படிங்க: அட கன்றாவி... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் மொத்ததையும் காட்டிய மீரா மிதுன்...!

மனதில் பட்டதை பளீச்சென பேசக்கூடிய அஜித், மிகப்பெரிய இயக்குநரானாலும் சரி, புதிதாக படம் பண்ணும் இயக்குநர்கள் என்றாலும் சரி எல்லாரிடமும் ஒரே மாதிரி தான் நடப்பார். அதே மாதிரி நெருங்கி பழக கூடியவர்களிடம் உண்மையாக இருக்க கூடியவர் என்று அடுத்தடுத்து அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.