Asianet News Tamil

கையில் சரக்கு கிளாஸுடன் படு மோசமாக போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி... பொறாமையில் பொங்கும் ‘குடி’மகன்கள்...!

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 

Actress Sri reddy Posting Glamour Photo With liquor Glass
Author
Chennai, First Published May 1, 2020, 5:53 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.  திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்... அஜித் பிறந்த நாளில் கதி கலங்கிப்போன தல ஃபேன்ஸ்..!

கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளையும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

சமந்தா, த்ரிஷா, தமன்னா, அமலா பால், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என முன்னணி நடிகைகள் ஒருவரையும் விட்டு வைக்காமல் வம்பிழுத்து வருகிறார். இடையில் இடையே தனது படுகவர்ச்சியான புகைப்படங்களையும் முகநூலில் பதிவிட்டு தேவையில்லாத பேச்சை வாங்கி கட்டி கொள்கிறார்கள். ஸ்ரீரெட்டியின் கவர்ச்சி புகைப்படங்களை ரசிக்க என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தால், கழுவி ஊத்த என தனி நெட்டிசன்களின் பட்டாளம் இருக்கிறது. 

இதையும் படிங்க: அட கன்றாவி... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் மொத்ததையும் காட்டிய மீரா மிதுன்...!

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி விதவிதமான சரக்கு பாட்டில்களுடன் போட்டோ வெளியிட்டு வருகிறார். அது எல்லாம் போதாது என்பது போல் கையில் மது கோப்பையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளார் ஸ்ரீரெட்டி. லாக்டவுனால் எங்களுக்கே சரக்கு கிடைக்கமாட்டேங்குது உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சுதுன்னு கேள்வி எழுப்புகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios