பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின், துணை இயக்குனரும்... '4 ஜி' படத்தின் இயக்குனருமான, அருண் பிரசாத் நேற்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம், அன்னனூரை சேர்ந்த அருண் பிரசாத் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

தற்போது பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை வைத்து '4 ஜி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன், சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான அன்னனூருக்கு சென்றுள்ளளார். 

மேலும் செய்திகள்: ரூ.30 கோடியில் உருவாகி வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சியின் படம்..! இப்போது என்ன நிலையில் உள்ளது தெரியுமா?
 

இந்நிலையில் நேற்று காலை, மேட்டுபாளையத்திற்கு தன்னுடைய புல்லட்டில் ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார். அப்போது அன்னனூர் சாலையில், புது காய்கறி மண்டி அருகே, எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். 

35 வயதாகும், இவரின் இந்த திடீர் மரணம் இவருடைய நண்பர்களை மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே நேற்று, ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய படத்தின் இயக்குனர் அருண் பிரசாத்துக்கு மிகவும் உருக்கமாக இரங்கலை தெரிவித்த நிலையில், அவரை தொடர்ந்து  'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் வேதனையோடு அருண் பிரசாத் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்:பாடல்கள் மூலம் கொரோனா நிதி திரட்டிய சின்மயி! எத்தனை லட்சம் தெரியுமா?
 

மேலும் செய்திகள்:அடங்காத மீரா மிதுன்...! பிளேசரை கழட்டி போட்டு முரட்டு ஆட்டம் போட்ட ஆண் நண்பர்..! ஹாட் வீடியோ
 

இதுகுறித்து அவர் கூறுகையில், "நண்பா என்னை ஹீரோ மாதிரி எடுடான்னு சொன்னியே... உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சிட்டியேடா நண்பா... தினமும் எவ்வளோ பேசியிருப்போம். எத்தனை ஆசைகளை சொன்ன... எல்லாம் காத்துல போயிடுச்சே அய்யோ... என் வெற்றியை உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா... உங்கம்மாவை என்ன சொல்லி தேத்துறது போடா டேய்... என வேதனைகளோடு இந்த பதிவை போட்டுள்ளார்.