உலக நாடுகளை கடந்து இந்திய மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் துரித நடவடிக்கையாக, ஊரடங்கு முடிவை கையில் எடுத்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்றால் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில், திடீர் என பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கின் காரணமாக, கூலி வேலை செய்து, தன்னுடைய பிழைப்பை நடத்தி வந்த பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் பலர் தானாக முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

மேலும், சிறு குறு பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தற்போது சில பணிகளுக்கு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: மூன்றே எழுத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஜி.வி.பிரகாஷ்! ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
 

இந்நிலையில் இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் நோக்கத்தில், பாடல்கள் பாடி அதன் மூலம் ரூபாய் 30 லட்சம் நிதி திரட்டியுள்ளார் பிரபல பாடகி சின்மயி. இணையதளம் மூலம் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலை பாடி தான் இந்த நிதியை அவர் திரட்டியுள்ளார். 

இதுவரை சுமார் 1700 பாடல்களை படி, அதன் மூலம் 30 லட்சம் மக்களுக்காக கொரோனா நிதி இவர் திரட்டியுள்ளதற்கு நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் சின்மயிக்கு வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்: ஆதவன் தன்னை முத்தமிட... குழந்தையை கொஞ்சும் எமி ஜாக்சன்..! ஹார்ட் டச்சிங் போட்டோஸ்!
 

இதுகுறித்து தெரிவித்துள்ள சின்மயி....  ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் வீட்டில் இருக்கிறோமே என சில பாடல்களை பாடி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடத் தொடங்கினேன். இப்படி தான் பாடிய பாடல்களை நிறைய பேர் விரும்பி ரசித்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு பிடித்த சில பாடல்களையும் தன்னை பாட கூறினர்.

அதற்கு நான், 'உங்களுக்கு பிடித்த பாடல்களை நான் பாடுகிறேன். அதற்கு பதிலாக இந்த பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய நீங்கள் நிதி தரலாமே?' என பதிவிட்டேன். அதற்கு பலரும் சந்தோஷமாக சம்மதித்தனர்.

மேலும் செய்திகள்: பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

இப்படி  தொடங்கிய பாடல் பயணத்தின் மூலம் தற்போது 30 லட்சம் நிதி கிடைத்துள்ளது. இதனை,  கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.