சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. பிரபலங்கள் குறித்து டுவிட்டரில் கருத்து சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது மட்டுமில்லாமல், அவர் இயங்கும் படங்களும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்தியில் ரங்கீலா, தெலுங்கில் லட்சுமி என்.டி.ஆர் ஆகிய படங்கள் மிகப்பெரும் பிரச்சனைகளை கிளப்பின. சமீபத்தில் ஆந்திராவின் முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை குறித்து "கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு"  என்ற பெயரில் ராம்கோபால் வர்மா எடுத்த படம், ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். பெங்களூரில் சில பெண்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றது குறித்து ஒரு கருத்தை கூறி இவர் ஏற்படுத்திய சர்ச்சையை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துவிட்டார். மகள் வயது பெண்ணின் முன்னழகை கேவலமாக விமர்சித்து ராம் கோபால் வர்மா போட்ட ட்வீட் கண்டனங்களை குவித்தது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். குறித்து ராம் கோபால் வர்மா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

இன்று ஜூனியர் என்.டி.ஆர். தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HappyBithdayNTR என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் என்.டி.ஆர். தன்னுடைய ஃபிட்டான உடல் அமைப்பைக் காட்டுவதுபோல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் அந்த சிக்ஸ் பேக் போட்டோவை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க:  ப்பா...‘கருப்பன்’ பட நடிகையா இது?.... ஓவராய் இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய தான்யா...!

அத்துடன், நான் ஓரின சேர்க்கையாளர் அல்ல என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும், இந்த படத்தில் உங்களைப் பார்த்த பிறகு அப்படி மாறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன மாதிரி உடலமைப்பு நைனா என்று பதிவிட்டுள்ளார்.