கமல் - விக்ரம் பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வாவின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியது!

கமல்ஹாசன் மற்றும் நடிகர் விக்ரமை வைத்து இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர்  ராஜேஷ் எம் செல்வாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Director rajesh m selva new movie shooting started

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு பாராட்டுக்குரிய படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது தனது அடுத்த புதிய படம் ஒன்றை அறிவித்துள்ளார். இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் நடிக்கின்றனர். 

Director rajesh m selva new movie shooting started

சன் டிவி முக்கிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஷாமிலி! குழந்தை பிறந்தபின் இவ்வளவு குண்டா ஆகிட்டாங்களே..!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. சைமன் கே கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார்.  கதிர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கமல்நாதன் கலை இயக்குனராக கமிட் ஆகியுள்ளார்.

Director rajesh m selva new movie shooting started

உஷார்... கார் லோன் என்கிற பெயரின் வினோத மோசடி! காவல் ஆணையர் அலுவலகத்தில் சீரியல் நடிகை நிலானி பரபரப்பு புகார்!

இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான முறையில் பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios