Rajamouli : ‘நாட்டு நாட்டு’ பாடலில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஆடும் வைரல் ஸ்டெப்பை இயக்குனர் ராஜமவுலி, அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியில் ஆடி அசத்தி உள்ளார். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி, பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பாப்புலர் ஆனார். இதையடுத்து அவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இதையடுத்து அவர் இயக்கும் படங்களுக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்).

வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதாபாத்திரங்களில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர். மேலும் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. வெளியானது முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி 10 நாட்களில் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் அதன் இசையும் ஒன்று. குறிப்பாக அதில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்நிலையில், அப்பாடலில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஆடும் வைரல் ஸ்டெப்பை இயக்குனர் ராஜமவுலி, அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியில் ஆடி அசத்தி உள்ளார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Actor Vinay : 40 வயது நடிகையுடன் மலர்ந்த காதல்.... திருமணத்துக்கு தயாராகும் வினய் - யார் அந்த நடிகை தெரியுமா?

View post on Instagram