- Home
- Cinema
- Actor Vinay : 40 வயது நடிகையுடன் மலர்ந்த காதல்.... திருமணத்துக்கு தயாராகும் வினய் - யார் அந்த நடிகை தெரியுமா?
Actor Vinay : 40 வயது நடிகையுடன் மலர்ந்த காதல்.... திருமணத்துக்கு தயாராகும் வினய் - யார் அந்த நடிகை தெரியுமா?
Actor Vinay : தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக மிரட்டி வரும் நடிகர் வினய்க்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த நடிகர் வினய், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இதையடுத்து அவர் மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும், எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.
ஹீரோவுக்கு வரவேற்பு இல்லாததால், வில்லனாக அவதாரம் எடுத்த நடிகர் வினய், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார். அவரது உயரத்திற்கும், தோற்றத்திற்கும் வில்லன் வேடம் செட் ஆனதால் தொடர்ந்து அவ்வாறே நடித்து வருகிறார் வினய். அண்மையில் இவர் வில்லனாக நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
இந்நிலையில், நடிகர் வினய்க்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 42 வயதாகும் நடிகர் வினய், 40 வயதாகும் நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையடுத்து தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... shruti hassan : அந்த இடத்தில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன் - ஓப்பனாக சொன்ன சுருதிஹாசன்