இளைய தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் பேரரசு. இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பல திரையரங்கங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனையும் படைத்தது. மேலும் இந்த படம் விஜய்க்கு சிறந்த நடிகர் என்கிற தமிழ்நாடு ஸ்டேட் அவார்டை பெற்று தந்தது.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை மல்லிகா. இவருடன் பேரரசு  காதலில் சிக்கியதாக கூறப்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு பின் இந்த தகவல் வெளியானபோது இவருக்கும் இவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என கூறபடுகிறது.

இவர் ஆரம்பத்தில் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில், பின் இவர் எடுத்த படங்கள் இவருக்கு எதிர்பாத வெற்றியை கொடுக்கவில்லை.

கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு 'ரூ 'என்கிற படத்தை எடுத்தார் அந்த படமும் ஒரு சில காரனத்தால் இதுவரை வெளிவராமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தான் எடுக்கும் படங்களுக்கு ஊர் பெயர்களை மட்டுமே பெரும்பாலும் பெயராக சூட்டி கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருந்த இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தற்போது தொடர் தோல்வி படங்களால் துவண்டு உள்ளார் என கூறப்படுகிறது.