"இசையின் விசையை அசைத்து பார்க்கும் லிடியன்".. அவர் பாணியில் அடுத்த பட அறிவிப்பு - இயக்குனர் பார்த்திபன் பராக்!

Director Parthiban Next Movie : கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குனராக களம் இறங்கிய பார்த்திபன், தனது "புதிய பாதை" என்கின்ற முதல் படத்தின் மூலம் தேசிய விருது வென்ற ஒரு மாபெரும் இயக்குனர்.

Director Parthiban next movie first look poster to be revealed by lydian nadhaswaram on jan 20 ans

பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து. அதன் பிறகு கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் இரா. பார்த்திபன். 

அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது. கடந்த 33 ஆண்டுகால சினிமா பயணத்தில் (இயக்குனராக) இவர் மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "இரவின் நிழல்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நியூ லுக்கில் லியோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்... அசரவைக்கும் அண்ணாச்சியின் கூல் போட்டோஸ்

அதே போல தமிழ் சினிமா உலகில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராகவும் இவர் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரம் ஏற்று நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பார்த்திபன். 

அதன் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் தோன்றவில்லை என்ற பொழுதும் மீண்டும் தனது இயக்குனர் பசிக்கு அவர் தீனி போட்டு வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை அவர் துவக்கியுள்ளார். இந்நிலையில் நாளை ஜனவரி 20ஆம் தேதி அந்த திரைப்படத்தினுடைய முதல் பார்வையானது வெளியாகவுள்ளது. 

இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின், முதல் பார்வையை குழந்தை பருவத்தில் இருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை வெளியிடுவார் என்று அவர் பாணியில் தெரிவித்துள்ளார். 

பாலிவுடில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா.. 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் செம ஜோடி - SHAITAAN கம்மிங் சூன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios