பிரபல இயக்குனர் பாண்டிராஜ், கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலையை நினைத்து... கண்ணீருடன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
90-களில் அதிரடி நாயகனாக அறியப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக இருக்கும் போதே... மிக சிறந்த மனிதர் என பெயரெடுத்த இவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு தமிழக அரசியலிலும் அதிரடியாக இறங்கினார். தேமுதிக என்கிற கட்சியை நிறுவி அதன் தலைவராகவும் மாறிய விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்து, பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று சட்டசபை சென்றார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால்... அதிமுகவில் இருந்து பிரிந்து விஜயகாந்த் எதிர்க்கட்சியாக செயல்பட்டது அனைவரும் அறிந்தது தான். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் சளி மற்றும் இரும்பலால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், நன்கு உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆன கேப்டன், இன்று தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
திருவேற்காட்டில் உள்ள ஜி.டி.என்.பேலஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதே நேரம் சேரில் சரியாக அமர கூட முடியாமல் அவர் நழுவி விழ பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பிடித்து அமர வைத்த காட்சிகள்... எப்படி இருந்த மனுஷன் இவரு என சிலரை கண் கலங்க செய்தது.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து... மனம் நொந்து பிரபல இயக்குனர் பாண்டிராஜ் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ... என கையெடுத்து கும்பிடும் எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு என கண்ணீருடன் இருக்கும் எமோஜியை போட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
