- Home
- Gallery
- Ajith Latest Photo: அஜர்பைஜானில் ஒன்று கூடிய AAA பிரபலங்கள்! அஜித்துடன் டின்னர் சாப்பிட்ட... போட்டோ வைரல்!
Ajith Latest Photo: அஜர்பைஜானில் ஒன்று கூடிய AAA பிரபலங்கள்! அஜித்துடன் டின்னர் சாப்பிட்ட... போட்டோ வைரல்!
தல அஜித் உட்பட மூன்று பிரபலங்கள், அஜர்பைஜான் நாட்டில் டின்னர் சாப்பிட்ட லேட்டஸ்ட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ajith
அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக, அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். சமீபத்தில் அஜித் ஏர்போர்ட் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதை தொடர்ந்து அஜித் அஜர்பைஜான் நாட்டில் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும், 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் ஆரவ்வுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. குறிப்பாக அஜித், 'விடாமுயற்சி' படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளது மட்டும் இன்றி, செம்ம ஃபிட்டாக மாறியுள்ளார்.
Ra.Sankaran Death: அதிர்ச்சி.!! பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் ரா.சங்கரன் காலமானார்!
முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும்... இந்த முறை படக்குழு சுமார் 70 நாட்கள் அங்கு தங்கி படப்பிடிப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித், ஆரவ், அர்ஜுன் ஆகிய மூன்று 'AAA' பிரபலங்கள்.... அஜர்பைஜான் நாட்டில் உள்ள, ஹோட்டல் ஒன்றில் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மூன்று பேருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிளேசர் அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும், 'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் குறிவைத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D