தனது முதல் படமான அட்டகத்தி படத்திலேயே கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். பெரிய நட்சத்திர பட்டாளங்கள் ஏதும் இல்லாமல் புதுமுகங்களை நம்பி வெளியான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தியை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்தது,  இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய கபாலி, காலா படங்கள் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. 

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் பா.ரஞ்சித், சாதிய ரீதியான பிரச்சனைகளுக்கும், சமூக பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். இயக்குநராக மட்டும் தன்னை சுருக்கி கொள்ளாமல், நீலம் புரொடக்‌ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். அந்த நிறுவனம் மூலம் தன்னை போல் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அப்படி அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

பா.ரஞ்சித், அனிதா தம்பதிக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மிளிரன் என்ற அழகான தமிழ் பெயரை சூட்டியுள்ளார் பா.ரஞ்சித். ஒளிரும் தன்மையுடையவன் என்பதே அந்த பெயரின் அர்த்தமாம். தனது மகனை பா.ரஞ்சித் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பா.ரஞ்சித்திற்கு தங்களது வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.