சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த வடிவேல் பாலாஜி நேற்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். மாரடைப்பால் கை, கால்கள் செயலிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பணமில்லாத காரணத்தால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

இதையும் படிங்க: கலகலப்பாய் சிரிக்க வைக்க இத்தனை கெட்டப்புகளா?... வடிவேல் பாலாஜியின் அசத்தல் அவதாரங்கள் இதோ...!

இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு சினிமா மற்றும் டிவி நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். 

சின்னத்திரையில் சாதித்த வடிவேல் பாலாஜி, சினிமாவிலும் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் கோலமாவு கோகிலா படத்தில்,  'சிவகார்த்திகேயன் மன்ற தலைவர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது அந்த படத்தில் வடிவேல் பாலாஜியை நடிக்க வைத்த இயக்குநர் நெல்சன், அவருடைய மரணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!

வடிவேல் பாலாஜியின் எல்லா காமெடி ஷோக்களையும் பார்த்துவிடுவேன். எப்படியாவது அவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கோலமாவு கோகிலா படத்தில் சிறிய கேரக்டரை கொடுத்தேன்.அவரும் சிறப்பாக நடித்து கொடுத்தார். அதன் பின்னர் டாக்டர் படத்தில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. ஆனால் எனது படத்தில் நிச்சயம் அவரை நடிக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.