திரைக்கதையில் எதார்தத்தை விட வித்தியாசத்தை அதிகம் புகுத்தி, படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். என்ன தான் இருட்டில் படமெடுக்கிறார் என சிலர் கலாய்த்தாலும், மிஷ்கினின் உலக தர சினிமாவை யாரும் ஓரமாக ஒதுக்கி தள்ள முடியாது. இவர் இயக்கத்தில் கடைசியாக உதயநிதி நடித்து வெளியான “சைக்கோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இதுவரை உதயநிதி நடித்த படங்களிலேயே இந்த படத்தில் அவருடைய வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்ததாகவும் ரசிகர்கள் பல பாசிட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வந்தனர்.

 

இதையும் படிங்க: தொடர் சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விஷால் நடிப்பில் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற “துப்பறிவாளன்” படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின், விஷாலை வைத்து இயக்கி வந்தார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின்.  பின்னர் இந்த படத்தை, விஷாலே இயக்கி நடிக்க முடிவெடுத்தார்.  ஆனால் தற்போது வரை, இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

மேலும் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் மிஷ்கின். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த படம் குறித்து தெரிவிக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே  நடிகர் சிம்பு, அருண் விஜய் என மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்தன. இதற்கான விடை செப்டம்பர் 20 ஆம் தேதி இரவு தெரிந்துவிடும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.