Vikram Prabhu new movie : முயற்சி பலிக்கவில்லை என்பதால் கார்த்திக்கிடம் இயக்கும் பணியை ஒப்படைத்துவிட்டு.. கதை வசன பணிகளை மட்டும் முத்தையா பெற்றுக்கொண்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது...
குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை முடித்துள்ளார். கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ப்ரோமோஷன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது..
விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா முதல் முறையாக வேறொரு படத்திற்கு கதை வசனம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதாவது கார்த்தி இயக்கும் ரீமேக்கில் கன்னடதிரைப்படத்தின் ரீமேக் படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.இந்த படத்திற்கு திரைக்கதை, வசனத்தை முத்தையா எழுதுகிறார்.
2018-ல் கன்னடத்தில் வெளியான திரைப்படம் டகரு. சிவராஜ்குமார், பாவனா நடித்த இந்தத் திரைப்படத்தை துனியா சூரி இயக்கியிருந்தார். அந்த வருடம் வெளியான கன்னட படங்களில் அதிகம் வசூல் செய்த படங்களில் 3வது இடத்தை இந்த டகரு பிடித்தது. ஆக்ஷன் படமான இதன் கதை சொல்லும் பாணியை வைத்துதான் 2021-ல் வெளியான ரவிதேஜாவின் கிராக் தெலுங்குப் படத்தை எடுத்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக உள்ளது.. ஆனால் இதன் ரீமேக் பதிப்பை முத்தையா கைப்பற்றியுள்ளதாகவும், அதில் ஆர்யாவை வைத்து இயக்க ட்ரை பண்ணியதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்பதால் கார்த்திக்கிடம் இயக்கும் பணியை ஒப்படைத்துவிட்டு.. கதை வசன பணிகளை மட்டும் முத்தையா பெற்றுக்கொண்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது...
