இயக்குனர் மோகன்.. பிரசாதம் குறித்த சர்ச்சை பதிவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை போட்ட அதிரடி உத்தரவு!

Director Mohan G : தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, அண்மையில் பிரபல கோவிலில் வழங்கும் பிரசாதம் குறித்து பேசிய விஷயங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியானார்.

director mohan g must ask apology high court madurai branch order ans

கடந்த சில வாரங்களாகவே இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் விஷயமாக மாறி இருக்கிறது திருப்பதியில் வழங்கப்படும் லட்டு விவகாரம். உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தெய்வத்திற்கும் அங்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியானது. 

மேலும் இந்த விஷயத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் மீது தான் தவறு உள்ளது என்று, தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகிய இருவரும் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் இந்திய அளவில் கோவில்களில் இதுபோன்ற விஷயம் இனி நடக்காமல் இருக்க, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார் பவன் கல்யாண். 

அஜித்தின் குட் பேட் அக்லி.. படத்தில் இணையும் லோக்கியின் நண்பன் - வேற லெவல் சம்பவம் வெயிட்டிங்!

தற்பொழுது இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரபல இயக்குனர் மோகன் ஜி, சில கருத்துக்களை வெளியிட்டார். அதாவது.. "திருப்பதியில் லட்டுவில் இப்போது கலப்படம் நடந்திருப்பது போல, பழனி பஞ்சாமிர்தத்தில் கூட கருத்தடை மாத்திரை கலந்து, வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டது". 

"பின்னர் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்தது என்று எனக்கு செவி வழி செய்திகள் கிடைத்தது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் என்னிடம் இல்லை என்பதால் தான், இதை செய்தியாளர்களிடம் சொல்லவில்லை" என்று அந்த காணொளியில் பேசியிருந்தார் பிரபல இயக்குனர் மோகன் ஜி.

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் திருச்சி மாவட்ட போலீசார் அவரை கைது செய்தனர். அவருடைய கைது நடவடிக்கைக்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அன்று மாலையே அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்ச்சியாக மிகப்பெரிய சர்ச்சுகளை ஏற்படுத்தி வந்தது. 

இந்த சூழலில் பழனி பஞ்சாமிர்தத்தில் மருந்து கலக்கப்படுவதாக வதந்தியை இயக்குனர் மோகன் பரப்பியதால் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. "வாய்ச்சொல் வீரராக இல்லாமல், எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் அதனுடைய உண்மை தன்மையை அறிந்திருக்க வேண்டும். ஆகவே சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக அதனை வெளியிட வேண்டும்" என்று இப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோடியில் சொத்து, குடிசை தான் வீடு: ஊர் முழுவதும் ஒரே பெயரில் மக்கள் - தமிழகத்தின் வினோத கிராமம் பற்றி தெரியுமா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios