இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பயோவில் இருந்து லியோ படத்தை அகற்றி உள்ள சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என நடிகர் பட்டாளமே இணைந்துள்ளனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ குறித்து அவ்வப்போது பல அப்டேட்களையும் படக்குழு பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியானது. மற்ற விஜய் பாடல்களை போலவே இந்த பாடலுக்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் 2-வது பாடல் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நா ரெடி பாடலுடன் சேர்த்து மொத்தம் 2 பாடல்கள் தான் உள்ளதாம். மீதி அனைத்து டீம் டிராக்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மாத இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொட்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பே படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து படம் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பயோவில் இருந்து லியோ படத்தை அகற்றி உள்ள சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் தனது ட்விட்டர் பயோவில், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களின் இயக்குனர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது லியோ படத்தை நீக்கி உள்ளார். எனவே லியோ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகிவிட்டாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். லோகேஷின் பழைய ட்விட்டர் பயோ மற்றும் தற்போதைய ட்விட்டர் பயோ இரண்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து வருகின்றனர். விஜய்க்கு லோகேஷ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது லோகேஷின் இந்த செயல் அதற்கு வலு சேர்க்கும்விதமாக அமைந்துள்ளது. எனினும் லோகேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.
இப்படி லியோ தொடர்பான குழப்பத்திற்கு மத்தியில் மறுபுறம் ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
