அவரை பேர் சொல்லி கூப்பிடாதீங்க.. தளபதினு கூப்பிடுங்க.. சர்ச்சையை கிளப்பியவரை லெப்ட் ரைட் வாங்கிய தளபதி?
தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. இந்த கருத்தை மேடையில் பலர் பேச, அது கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையாக வெடித்து இன்னும் அடங்காத நிலையில், அதற்குள் அடுத்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல அரசியல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காசோலை மற்றும் பட்டயங்கள் வழங்கியதன் மூலம், முதல் தலைமுறை வாக்காளர்களை தளபதி விஜய் கவர நினைக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது, இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது அதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், நான் தளபதி விஜயின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.
உடனே அந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த தளபதி விஜயின் உதவியாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், நம் தலைவனை பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது, ஆகவே தளபதி என்று மட்டும் அழையுங்கள் என்று கூறி அந்த பெண்ணிடம் கடிந்து கொண்டார்.
ஏடாகூடமாக புஸ்ஸி ஆனந்த் பேசிய அந்த விஷயம் தற்பொழுது இணையத்தில் விவாத பொருளாக மாறிய நிலையில் இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் அதிக கோபம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் தளபதி என்றால் நீங்கள் என்ன சின்ன தளபதியா என்று வடிவேல் பாணியில் தளபதி விஜய் ரசிகர்கள், அவரை கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பொது வெளியில் அவர் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, இனி இவ்வாறு அவர் செய்யக்கூடாது என்று தளபதி விஜய் அவர்கள், அவரிடம் கடிந்து கொண்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
எல்லாம் லியோ மயம்.. மலேசியாவில் நடக்கும் வெறித்தனமான ப்ரோமோஷன் - சுட சுட ரெடியாகும் Coins!