Asianet News TamilAsianet News Tamil

"ஈகிள் இறங்கியது "...விக்ரம் கமலின் வேறலெவல் வொர்கவுட் வீடியோவை பகிர்ந்த இயக்குனர்!

படப்பிடிப்பு தள வீடியோ சேர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள வீடியோவில் பீரங்கி மீது கமல் புஸ்ஸாப் செய்கிறார். அந்த பதிவுடன் கமலின் சாரின் ப்ராமிஸ் படி 26 முறை செய்தார். கழுகு இறங்கியது என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

Director lokesh kanagaraj who shared Vikram Kamal mass level workout video
Author
Chennai, First Published Jun 28, 2022, 8:46 PM IST

சமீபத்திய ஹிட் படமான விக்ரம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை நிறைவு செய்தது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் கலக்கி வரும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில்  இந்தியாவில்300 கோடிக்கு அருகிலும் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director lokesh kanagaraj who shared Vikram Kamal mass level workout video

மேலும் செய்திகளுக்கு... விக்ரம் வில்லனை பார்த்து அசந்த புஷ்பா இயக்குனர்..இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வனை கமிட் செய்ய திட்டம்?

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கமலின் இந்த படம் வெற்றிகரமான முயற்சியாக அமைந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கியுள்ள டார்க் ஆக்ஷன் படமான இது ரசிகரக்ளுக்கு சரியான விருந்தாக அமைந்தது. 60 வயதை கடந்த கமலின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு தான் விட்டார்கள்.

Director lokesh kanagaraj who shared Vikram Kamal mass level workout video

முந்தய விக்ரமின் தொடர்சியாக கட்டப்படும் இதில் பல திருப்பங்களும் அதிரடி ஆக்ஷனும் நிரம்பி இருந்தது, அதோடு விஜய் சேதுபதியின் வில்லத்தனம், 10 நிமிடமாக இருந் போதிலும் நின்று பேசிய ரோலெக்ஸ்  ( சூர்யா) என படம் மிரட்டி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு... ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் ‘டீசல்’.. பர்ஸ்ட் லுக் இதோ!

Director lokesh kanagaraj who shared Vikram Kamal mass level workout video

படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் இயக்குனருக்கு விலையுயர்ந்த கார் ஒன்றையும் துணை இயக்குனர்களுக்கு பைக்கும் ரோலெக்ஸ் சூர்யாவிற்கு வாட்சும் பரிசாக அளித்திருந்தார். இன்னும் ஓயாத விக்ரம் அலையில் புதிதாக படப்பிடிப்பு தள வீடியோ சேர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள வீடியோவில் பீரங்கி மீது கமல் புஸ்ஸாப் செய்கிறார். அந்த பதிவுடன் கமலின் சாரின் ப்ராமிஸ் படி 26 முறை செய்தார். கழுகு இறங்கியது என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... ஹிருத்திக் ரோஷனால் எகிறிய விக்ரம் வேதா பட்ஜெட் ! வெளிநாடு தான் வேண்டுமென அடம்பிடிக்கும் நாயகன்?

விக்ரம் படத்தின் இறுதியில் ரோலெக்ஸ் அறிமுகத்தோடு கைதி 2வுக்கான இண்ட்ரோவையும், விக்ரம் 2வுக்கான அறிமுகத்தையும் இணயக்குனர் லோகேஷ் கொடுத்து விட்டமையால் அடுத்த அதிரடியில் சூர்யாவை முழு நீள வில்லனாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே லோகேஷ் தளபதி விஜயின் 67 வது படத்தை இயக்குவது குறித்த முன் பணியில் இருப்பதால் மேற்குறிய இரண்டு திட்டங்களும் தாமதமாகும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios