'லியோ' சக்சஸ் ஆக ராமேஸ்வரம் கோவிலுக்கு சர்ப்ரைஸ் விசிட்! சுற்றிவளைத்த ரசிகர்கள்.. ஆட்டோவில் கிளம்பிய லோகேஷ்

'லியோ' படம் வெற்றிபெற வேண்டி அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Director lokesh Kanagaraj visit rameshwaram temple for Leo movie success gan

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வரும் 19ந்தேதி வெளியாக உள்ள 'லியோ' திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த  கிணறுகளில் புனித நீராடி பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தார் .

அப்போது திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருக்கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி சென்றார். அவருடன் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் லியோ பட உதவி இயக்குனர்களும் உடன் சென்று இருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த வாரம் லியோ படக்குழுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரை சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன் விஜய் உடன் அவர் கூட்டணி அமைத்த மாஸ்டர் பட ரிலீஸ் சமயத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனிருத் உள்பட படக்குழுவினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய படங்கள் ரிலீஸ் ஆகும் முன்னர் இப்படி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்கள் வெளியாகுவதற்கு முன் ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த லோகேஷ், தற்போது லியோ படம் வெற்றிபெற வேண்டி அங்கு சுவாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... லோகி பொத்தி பொத்தி பாதுகாத்த லியோ பட சீக்ரெட்டை பொசுக்குனு போட்டுடைத்த உதயநிதி - என்ன பழக்கம்னா இது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios