தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சூர்யா - ஹரி கூட்டணி 6வது முறையாக ஒன்றிணையவிருந்த அருவா படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அந்த படத்திலிருந்து ஹரி விலகியதாக கூறப்படுகிறது. இடையில் அந்த கதையில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூட தகவல்கள் பரவின. 

 

இதையும் படிங்க: சித்ராவின் நடத்தையில் சந்தேகம்?... ஹேம்நாத்திடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...!

ஆனால் முதன் முறையாக தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்க ஹரி இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தொடர்ந்து Drumsticks productions சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் அவர்கள் தயாரிப்பில் டைரக்டர் ஹரி அவர்கள் இயக்கத்தில், அருண் விஜய் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை தயாரிக்கிறோம்.

 

இதையும் படிங்க: மகனுக்காக சூர்யாவுடன் கரம் கோர்த்த அருண் விஜய்... தாத்தா, அப்பாவை அடுத்து ‘குட்டி’ நாயகன் ரெடி...!

இப்படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும். பிப்ரவரி மாதம் 2021 படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மற்ற விபரங்கள் விரைவில் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகா பட்ஜெட், ஹரி -அருண் விஜய் முதன் முறை இணைவு என்பதால்... ஸ்கீரினில் அனல் பறக்கும் அளவிற்கு ஆக்‌ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் படம் ஒன்று கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறனர். 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கி, ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.