இயக்குனர் கவுதம் மேனன், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில்  கடந்த வாரம் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்திருந்தார்.

இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கௌதம் மேனன்.

இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் சந்தோஷம், அசுரன் மற்றும் ஓ மை கடவுளே படத்திற்கு அடுத்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு மக்கள் அதிகம் வருவதை பார்க்க முடிந்தது.  

அதே போல் எந்தவொரு திரைப்படத்திலும் அதன் கதையும், கதாபாத்திரமும், பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன்.  பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

மேலும் இது குறித்து சொல்ல கூடாது, எனினும் சொல்கிறேன்... ஒரு படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அதன் கதை எனக்கு பிடிக்க வில்லை. படப்பிடிப்பும் சரியாக போகவில்லை. பின் அந்த படத்தின் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

தன்னை 'கோலி சோடா' படத்தில் மூலம் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு விஜய் மில்டனுக்கு நன்றி தெரிவித்த அவர்,  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தின்  ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.