TNPL 2022 : போட்ட முதல் பாலே விக்கெட்... TNPL-ல் கலக்கும் கவுதம் மேனன் மகன் - அறிமுக போட்டியிலேயே அசத்தல்
Arya Yohan Menon : இயக்குனர் கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹான் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அறிமுக போட்டியிலேயே கலக்கி உள்ளார்.
காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். மாதவன் நடித்த மின்னலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கவுதம் மேனன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என எராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவரின் மகன் ஆர்யா யோஹான் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கலக்கி வருகிறார். 19 வயதாகும் ஆர்யா யோஹான் TNPL-ல் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின.
இதையும் படியுங்கள்... பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்புறாங்கனு சொன்னதால் எதிர்ப்பு! மாட்டுசாணி மாதவன் என வறுத்தெடுக்கும் Netizens
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹான். இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த ஆரம்பம் முதலே பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. நெல்லை அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்ததே ஆர்யா யோஹான் தான்.
இதையும் படியுங்கள்... Shakeela : விஜய் கூடலாம் டான்ஸ் ஆடி இருக்கா... ஆனா 23 வயசுலயே இறந்துட்டா - தங்கை மறைவால் கலங்கிய ஷகீலா
முதல் ஓவரில் 11 ரன்கள் விளாசிய ஜாஃபர் ஜமாலை இரண்டாவது ஓவர் வீச வந்த ஆர்யா யோஹான் தனது முதல் பந்திலேயே அவுட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 ஓவர்கள் வீசிய ஆர்யா யோஹான் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மற்றும் 1 ரன் அவுட் செய்திருந்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... TNPL 2022: அஜிதேஷ் அபார பேட்டிங்.. சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த நெல்லை ராயல் கிங்ஸ