TNPL 2022: அஜிதேஷ் அபார பேட்டிங்.. சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த நெல்லை ராயல் கிங்ஸ

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நெல்லை ராயல் கிங்ஸ்.
 

nellai royal kings beat salem spartans by 5 wickets with the help of ajitesh batting in tnpl 2022

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசனின் முதல் போட்டியில், 3 முறை சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி, இன்று சேலம் ஸ்பார்ட்டன்ஸை எதிர்கொண்டது.

இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கிய இந்த போட்டி நெல்லையில் நடந்தது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், பிரதோஷ் பால், பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜி அஜிதேஷ், சஞ்சய் யாதவ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜகான், என்.எஸ்.ஹரீஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஆர்யா யோஹன் மேனன்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி:

கோபிநாத், ஜாஃபர் ஜமால், எஸ் அபிஷேக், ஆர் கவின் (விக்கெட் கீப்பர்), டேரைல் ஃபெராரியோ, ரவி கார்த்திகேயன், ஜி கிஷோர், எம் கணேஷ் மூர்த்தி, முருகன் அஷ்வின் (கேப்டன்), ஜி பெரியசாமி, பி பிரானேஷ்.

முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜாஃபர் ஜமால் 11 ரன்னிலும், கோபிநாத் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 30 ரன்களுக்கே சேலம் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரைல் ஃபெராரியோ மற்றும் கவின் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

இதையும் படிங்க - பயிற்சியாளர் பதவிக்கு தகுதியே இல்லாத ரவி சாஸ்திரியால் தான் கோலி ஃபார்மை இழந்தார்.! ரஷீத் லத்தீஃப் கடும் தாக்கு

3வது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய கவின் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஃபெராரியோ 49 பந்தில் 60 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி.

150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் 27 பந்தில் 35 ரன்கள் அடித்தார். பாபா அபரஜித் 25 பந்தில் 32 ரன்கள் அடித்து நல்ல பங்களிப்பு செய்தார். சூர்யபிரகாஷும் அபரஜித்தும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்து கொடுத்தனர்.

இதையும் படிங்க - நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

அதன்பின்னர் இந்திரஜித் 15ரன்களிலும், சஞ்சய் யாதவ் ரன்னே அடிக்காமலும் வெளியேற, நெல்லை அணி மீது அழுத்தம் அதிகரித்தது. அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து சிறப்பாக அடித்து ஆடிய அஜிதேஷ் 25 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் நின்று நெல்லை அணியை வெற்றி பெறச்செய்தார்.

அஜிதேஷின் அதிரடியால் 18வது ஓவரிலேயே இலக்கை அடித்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நெல்லை அணி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios