Dhanush Raayan Movie : நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தின் First Look போஸ்டர் மற்றும் தலைப்பு அண்மையில் வெளியானது. இதனையடுத்து படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வருகின்றார் தனுஷ்.

பிரபல நடிகர் தனுஷ் அவர்களுடைய இயக்கத்தில் ஏற்கனவே பா. பாண்டி என்கின்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் இரண்டாவதாக உருவாயுள்ள "ராயன்" திரைப்படம் பற்றிய தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தின் வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிக்கின்றார். இந்த தகவலை இயக்குனர் தனுஷ் அவர்களே சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

'ஆட்டோகிராப்' பட நடிகை மல்லிகாவா இது? உடல் எடை கூடி அடையாளமே தெரியல! மகன் - கணவரோடு இருக்கும் போட்டோஸ்!

மேலும் தனது அண்ணனும், தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குனருமான செல்வராகவன் அவர்களும் ராயன் திரைப்படத்தில் நடிகராக இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில் ராயன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை இயக்குனர் தனுஷ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

Scroll to load tweet…

தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை, நடிகர்கள் குறித்த முழு தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு விடுதி ஒன்று நடத்திக்கொண்டு, gangsterகளாக இருக்கும் சிலரின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதைக்களம் நகரும் என்று கூறப்படுகிறது.

உறவினர் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய கையேடு... படப்பிடிப்பு தேதியை அறிவித்த லெஜெண்ட் சரவணன்!