Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர்களே... பிக்பாஸ் சேரன் உங்களுக்கு கொடுத்திருக்கும் டாஸ்க்! குழந்தைகளுக்கு காத்திருக்கிறது பல பரிசுகள்!

கோரோனோ  தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒரு நாள், ஊரடங்கு உத்தரவை பின் பற்றுமாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கும் வெளியில் போக முடியாத இந்த சூழ்நிலையில், இயக்குனர் சேரன் மற்றும் ட்ரீம்  சௌண்ட்ஸ் அண்ட் வால் போஸ்டர் இணைந்து நடத்தும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
 
director cheran announce new competition for today
Author
Chennai, First Published Mar 22, 2020, 11:12 AM IST

கோரோனோ  தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒரு நாள், ஊரடங்கு உத்தரவை பின் பற்றுமாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கும் வெளியில் போக முடியாத இந்த சூழ்நிலையில், இயக்குனர் சேரன் மற்றும் ட்ரீம்  சௌண்ட்ஸ் அண்ட் வால் போஸ்டர் இணைந்து நடத்தும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்... "உங்கள் குழந்தைகளின் தனித் திறமையை அறிய ஒரு வாய்ப்பு.  கொரோனா  பயம் உலகை அச்சுறுத்தும் இவ்வேளையில், நமது இந்தியாவிலும் அது பரவ ஆரம்பித்திருக்கும். இந்த  நிலையில் ஞாயிறு (இன்று ) ஒரு நாள் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு. நமது நலன் கருதி அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

director cheran announce new competition for today

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு தினமும் 18 மணி நேரம் ஓடிய நாம் எப்படி ஒரு நாள் முழுக்க கழிக்கப் போகிறோம் என அவரவர் யோசிக்கும் இவ்வேளையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாக இதை மாற்றலாம் என எங்களுக்கு தோன்றியது. ஆம்... இந்த ஒரு நாள் முழுவதும் அப்பா இயக்குனர், அம்மா கேமராமேன், குழந்தைகள் நடிகர்-நடிகைகள்.

 உங்கள் வீட்டை  ஸ்டுடியோவா மாற்றுங்கள். உங்கள் குழந்தைகளுக்குள்  இருக்கிற திறமைகளை பதிவு பண்ணுங்க. அது எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவுகோல் இல்லை.

director cheran announce new competition for today

ஆடுறவங்க ஆடலாம், ஓவியர்கள் வரையலாம், கவிஞர்கள் எழுதலாம், விஞ்ஞானி ஆகலாம் கணித மேதை ஆகலாம். சுத்தம் செய்ய விரும்புவர்கள் சுத்தம் செய்யலாம். அடை தயாரிக்கலாம் சமைத்தும் காட்டலாம். எதில் தங்கள் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள் என நீங்களே மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளை என்னவாக உருவாக்க வேண்டும் என அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொள்ளலாம்.

வீடியோவுடன்  அதில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் பெயர், வயது, பள்ளி மற்றும் பெற்றோர்களின் பெயர் இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். உங்கள் வீடியோக்களை இயக்குனர் சேரன் தேர்வு செய்யது சிறந்த பத்து வீடியோக்களுக்கு இயக்குனர் அவர்களால் நேரில் சன்மானமும் பாராட்டும் கொடுக்கப்படும்.  கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் இயக்குனர் அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும்  பரிசும் அனுப்பிவைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே கலந்துக்கோங்க... பரிசுகளை வெல்லுங்க...

director cheran announce new competition for today

director cheran announce new competition for today

Follow Us:
Download App:
  • android
  • ios