Asianet News TamilAsianet News Tamil

“தியேட்டர்களை திறந்தாலும் திரைப்படங்கள் வெளியாகாது”... பாரதிராஜா அதிரடி நிபந்தனை...!

தீபாவளிக்கு படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தயாராகி வரும் நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Director Bharathiraja  statement about New movie Release
Author
Chennai, First Published Nov 2, 2020, 1:22 PM IST

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து தமிழக அரசும் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க அனுமதி அளித்துள்ளது. 

Director Bharathiraja  statement about New movie Release

 

இதையும் படிங்க: சன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...!

தீபாவளிக்கு படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தயாராகி வரும் நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியவுடன், இனி மேலும் VPF என்கிற கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும், மற்றும் அனைத்து டிஜிட்டல் ப்ரொஜெசூடஷின் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும் முறையாக கடிதம் அனுப்பி அதில் 12 வருடங்களுக்கு மேலாக கட்டி வரும் VPF என்கிற வாராவாரம் கட்டணத்தை இனிமேல் கொடுக்க முடியாது, டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தர முடியும் என்று தெரிவித்து இருந்தோம். 

Director Bharathiraja  statement about New movie Release

திரையரங்கில் உள்ள ப்ரொஜெக்டர் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையை திரையங்குகள் தான் கட்ட வேண்டும், தயாரிப்பாளர்கள் அல்ல என்பதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். அத்தகைய ஒரு ONE TIME கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும் எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். 100 பேருக்கும் மேல் நடப்பு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்து தெரிவித்த போதிலும், திரையரங்கு உரிமையாளர்களும், டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களும் (QUBE/UFO), எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் நாங்கள் VPF தொடர்ந்து கட்டணத்தை வாங்குவோம் என்று எங்களுக்கு தெரிவித்து உள்ளனர். 

Director Bharathiraja  statement about New movie Release

 

இதையும் படிங்க: நம்ம கண்ணம்மாவா இது?... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...!

தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில் ஒன்றை கூட அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளதால், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து VPF கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும் வரை தங்களின் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த VPF கட்டணப் பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை, அனைத்து தயாரிப்பாளர்களும், தங்களின் புதிய படங்களின் வெளியீட்டு தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோலசித்து முடிவு எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios