ஏ.வி.எம்-மில் இருந்து சட்டையை பிடித்து வெளியே தள்ளியதால் வந்த வைராக்கியம்... இயக்குநர் பாரதிராஜாவின் அதிரவைக்கும் ஃபிளாஷ்பேக்...!
ஏன்? என்றால் சர்வர் சுந்தரம் படத்திற்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது எனக்கூறி, தனது பிளாஷ்பேக் ஒன்றை போட்டுடைத்தார்.
நடிகர் சந்தானத்தின் "டகால்டி", "சர்வர் சுந்தரம்" படங்கள் ஒரே நாளில் வெளியாக இருந்தது. அப்போது இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் இடையேயான பிரச்சனையை பாராதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்க கூட்டுக்குழுவினர் தலையிட்டு சமரசம் செய்துவைத்தனர். அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. அதில் டகால்டி பட தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி, சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் செல்வகுமார், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை... யூகிக்க முடியாத மாற்றம்... பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு...!
அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, "சர்வர் சுந்தரம்" திரைப்படம் நடிகர் நாகேஷின் நினைவு நாளான ஜனவரி 31 அன்று ரிலீஸ் ஆக வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டேன். ஆனாலும் சமரசங்களுக்குப் பிறகு அந்த படம் பிப்ரவரி 14ம் தேதி வெளிவர உள்ளது, எனக்கு மகிழ்ச்சி தான். ஏன்? என்றால் சர்வர் சுந்தரம் படத்திற்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது எனக்கூறி, தனது பிளாஷ்பேக் ஒன்றை போட்டுடைத்தார்.
இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!
உதவி இயக்குநராக கூட வாய்ப்பு கிடைக்காத காலத்தில் தேனாம்பேட்டையில் சினிமா படங்களை வாங்கி விற்கும் கோதண்டபாணி என்பவரிடம் 2 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். அப்போது நடிகர் நாகேஷின் "சர்வர் சுந்தரம்" படத்தை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டினர். அன்று கோதண்டபாணியுடன் நானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தை காண சென்றேன். ஏ.வி.எம். ஸ்டூடியோ தியேட்டர் வரை சென்று படத்தை காண ஆர்வத்துடன் காத்திருந்த என்னை ஒரு கை தட்டி எழுப்பியது.
இதையும் படிங்க: லுங்கி, பனியனில் கையில் வாளுடன் செம்ம டெரர் காட்டும் தனுஷ்... தரமான சம்பவம் காத்திருக்கு....!
அப்போது மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தவர், யார் நீ?, இங்க ஏன் வந்தாய்? என்று கேட்டு என் சட்டையை பிடித்து இழுத்து, ஏ.வி.எம். ஸ்டூடியோ கேட் வரை கொண்டு வந்து வெளியே தள்ளினார். அழுகையாக வந்தது. அப்போ முடிவு பண்ணேன், ஒரு பொழுதாவது இயக்குனராகவோ, நடிகராகவோ இதே இடத்தில் வந்து நிக்கனும் என ஏ.வி.எம். வாசலில் நின்று உறுதி எடுத்தேன். நான் இயக்குநராக உருவான பிறகு ஏ.வி.எம். நிறுவனமே என்னை படம் இயக்க அழைத்தது என பாராதிராஜா தெரிவித்தார்.