தனது ’மானசீக’ குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை ஏகப்பட்ட இக்கட்டுகளில் மாட்டியதால் எங்கே ‘விஜய் 63’ ஐ இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துவிடாமல் போய்விடுமோ என்ற டென்சனுடன் இருந்த அட்லி, நேற்று அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து தலைகால் புரியாமல் தவிக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மெர்சல்’ படத்தின் ஒட்டுமொத்த ஒர்க்கிங் ஸ்டில்களையும் திகட்டத் திகட்ட அப்லோட் பண்ணி விஜய் ரசிகர்களையே கூட வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்.

இதைக்கண்டு வெறுப்பான ரசிகர்கள் ‘அய்யா ராசா நீ பண்ணப்போறது பாடாவதிக் கதையா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா என்னோட சொந்தக் கதைதான்னு எதாவது ஒரு கோயில்ல வச்சி சத்தியம் பண்ணிருய்யா. உனக்கு புண்ணியமா போகும்’ என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

இன்னொரு குரூப்போ, ‘தம்பி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கீங்க போலத் தெரியுது. மறந்துபோயி மறுபடியும்’மெர்சல்’ படத்தையே சுட்டுராதீங்க. அது நீங்க ஏற்கனவே ‘எடுத்து’ எடுத்தது. அந்த டிவிடியை மட்டும் கொஞ்சம் ஒளிச்சிவைங்க’ என்கிறது.  படம் முடியும் வரை இந்த அட்லி படுத்தப்போகும் பாட்டையும் அவரை பதிலுக்கு ஓட்டப்போகும் வலைஞர்களையும் நினைத்தால் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழமுடியும் என்று தோணவில்லை.