’பிகில்’படம் 25 வது நாளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அட்லியின் மானத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. ஏற்கனவே பல காட்சிகள் எங்கிருந்து திருடப்பட்டது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்தத் திருட்டு பார்ப்பவர்களின் அடி வயிறு கலங்க வைக்கிறது.

படத்தின் ஒரு காட்சியில் சிங்கப்பெண்களுக்கு பயிற்சி தரும் கோச் விஜய் அவர்கள் சரியாக கோல் அடிக்காத நிலையில் கிரவுண்டை ரவுண்ட் அடித்துவரச் சொல்லி தண்டனை கொடுப்பார். இந்த தண்டனை கடைசிப் பெண் ஒழுங்காக கோல் அடிக்கும் வரை தொடரும். இக்காட்சி அப்படியே அச்சு அசலாக ’த மிரக்கிள் சீஸன்’என்ற படத்திலிருந்து கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அட்லியின் மானத்தை வாங்கியுள்ள ஒரு ரசிகர்,...ஈவு இரக்கமே இல்லையா @Atlee_dir நண்பா ..என்று கதறியிருக்கிறார். பிகில் படம் குறித்து ரிலீஸுக்கு முன்பு பேட்டியளித்த அட்லி இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப்பார்த்து செதுக்கியுள்ளோம் என்று கூறியிருந்தார். ‘பார்த்துப் பார்த்து’என்று அவர் சரியாகத் தானே சொல்லியிருக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்கள் ரசிகர்கள்.