சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.  அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்து  மூடப்பட்டுள்ளதால் இன்று அமேசான் பிரைமில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆன்லைன் தளத்தில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் வலுத்தது. இதனிடையே சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியாகி தாறுமாறு வைரலானது. கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்த பொன்மகள் வந்தாள் டிரெய்லர் படத்தின்  மீது அளவில் எதிர்பார்ப்பையும் தந்துவிட்டது.

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

தடைகளை எல்லாம் தாண்டி அமேசான் பிரைமில் வெளியான ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நேற்று திரையிடப்பட்ட பிரீமியர் ஷோவைப் பார்த்து திரைத்துறையில் பலரும் ஜோதிகாவின் நடிப்பையும், அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக்கின் முதிர்ச்சியான இயக்கத்தையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீ, பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

பொன்மகள் வந்தாள் வலுவான செய்தி, உணர்ச்சிபூர்வமாக இயக்கப்பட்ட படம். இயக்குநர் பெட்ரிக், ஜோதிகா மேம், சூர்யா சார், பார்த்திபன் சார் அனைவருக்கும் இந்த படம் பெருமை சேர்த்துள்ளது. என்று படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.