Director Arputhan Death: அதிர்ச்சி... பிரபல இயக்குனர் விபத்தில் சிக்கி மரணம்!
தமிழில் நடன இயக்குனராக இருந்த, ராகவா லாரன்ஸை ஹீரோவாக சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடன இயக்குனரான லாரன்ஸ் நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் பல ரிஜக்க்ஷனை சந்தித்துள்ளார். இந்நிலையில், இவரின் நடிக்கும் திறனை உணர்ந்து, ராகவா லாரன்ஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு தான் இயக்கிய 'அற்புதம்' படத்தில், ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் அற்புதன்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், குணால் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயினாக அனு பிரபாகர் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், லாவண்யா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த படத்தை தொடர்ந்து, பரத் நடித்த மனதோடு மழைக்காலம்’ ’செய்யவே சிறுகாளி’ போன்ற சில படங்களை மட்டுமே இயக்கினார் அற்புதன். 52 வயதாகும் இவர் அண்மையில் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் இறந்து விட்டதாக இன்று காலை தகவல் வெளியானதை தொடந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.