Director Ravi Shankar : இயக்குனர் ரவி சங்கரின் தற்கொலை, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து இப்பொது பார்க்கலாம்.
ரவி சங்கரின் திரை பயணம்
சிறுகதை எழுத்தாளரான இயக்குனர் ரவிசங்கர், பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் தான் பிரபல நடிகர் மனோஜ், மறைந்த முன்னாள் நடிகர் குணால் ஆகியோரை வைத்து, கடந்த 2002ம் ஆண்டு "வருஷமெல்லாம் வசந்தம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி, மிகப்பெரிய வசூல் வெற்றியை கண்டார்.
ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் ரவி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாடலாசிரியராக பயணிக்க தொடங்கிய ரவி சங்கர், சூரியவம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" என்ற பாடலை எழுதி மீண்டும் புகழ்பெற்றார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறை பக்கமே வராமல் இருந்த ரவி சங்கர், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு காரணம் என்ன? கைப்பட ரவிசங்கர் எழுதிய கடிதம் சொல்வதென்ன?
Cervical Vertigo என்ற நரம்பு சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இயக்குனர் ரவி சங்கர். இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றல், மயக்கம், உடலில் ஒரு சமநிலை இல்லாமை போன்ற பல அசௌகரியங்கள் ஏற்படும். இதனால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த அவர், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை சுமார் 10 மாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டதாக அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.
ரூ.1000 கோடியைத் தாண்டி எகிறிய கல்கியின் வசூல் வேட்டை! தெறிக்கவிடும் பிரபாஸ் - புஜ்ஜி காம்போ!
மேலும் மும்பையில் உள்ள தனது அக்கா ராதாவுக்கும், நியூசிலாந்தில் உள்ள தனது அண்ணன் ஹரிக்கும் ஏற்படும் மன வேதனைக்கும், வருத்தத்திற்கும் மனமார மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் இந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார். வலி, வேதனை இல்லாமல் எளிய வகையில் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்பதை அறியவே எனக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது.
ஒரு வழியாக இன்றோடு எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஏற்கனவே என் நண்பர் ஒருவரிடம் வாங்கிய கடனை அவருக்கு GPay மூலம் அனுப்பிவிட்டேன், மற்றொரு நண்பருக்கு நான் பத்தாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது, அதை மட்டும் கொடுத்து விடுங்கள். நான் தனிமையில் இருந்த காலகட்டத்தில் எனக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும் நன்றி.
வீட்டு ஓனர் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகை தர வேண்டும், மேலும் எனக்கு ஆட்டோ ஓட்டுநராக இருந்து உதவிய நபருக்கு வேண்டுமென்றால் என் வீட்டில் உள்ள பொருட்களை கொடுத்து விடுங்கள் என்று அந்த மடலில் அவர் கூறியிருக்கிறார்.
