Ranjith : "அவர்களின் வளர்ச்சி.. சினிமாவின் தளர்ச்சி.." வெற்றிமாறன் & பா. ரஞ்சித்தை சாடிய பிரவீன் - எங்கே? ஏன்?
Actor Ranjith : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ரஞ்சித் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்பொது கவுண்டம்பாளையம் என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான "பொன் விலங்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர் தான் ரஞ்சித். 1990களின் தொடக்கத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் ரஞ்சித், ஒரே ஆண்டில் 11 திரைப்படங்கள் நடித்த ஒரு முன்னணி நட்சத்திரம் ஆவார். கடந்த 2004ம் ஆண்டு வெளியான "பீஷ்மர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் களமிறங்கினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல், முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டு வரும் அவர், தற்பொழுது "கவுண்டம்பாளையம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நேற்று இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, அந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் மாற்றும் நடிகரான பிரவீன் காந்தி, கவுண்டம்பாளையம் படம் குறித்து பல விஷயங்களை பேசியதோடு பா. ரஞ்சித் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் வளர்ச்சி, தமிழ் சினிமாவின் தளர்ச்சியாக மாறி இருக்கிறது என்று நேரடியாகவே பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சாதி சம்பந்தமான படங்களை எடுத்து மக்களை தவறான பாதைக்கு அவர்கள் அழைத்துச் செல்வதாக பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். அதே நேரம் கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜாதியைப் பற்றி பேசும் திரைப்படமாக இருந்தாலும் அது நல்ல திரைப்படம் என்று கூறினார் பிரவீன் காந்தி. சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவை தவறான பாதையில் அழைத்துச் சென்றுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் ஜாதியை பற்றி பேசியவன், சமுதாயத்தில் ஒதுக்கப்படவேண்டியவன் என்று கூறினார். கோவையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தபோது அதை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மனிதர் ரஞ்சித் தான். ஆகியால் அவர் எடுக்கும் படங்கள் நல்ல படமாகத்தான் இருக்கும் என்றும் பிரவீன் கூறினார்.