- Home
- Gallery
- Priyanka : மாதவனின் "ஜே ஜே".. அப்பட நாயகி பிரியங்காவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!
Priyanka : மாதவனின் "ஜே ஜே".. அப்பட நாயகி பிரியங்காவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!
Actress Priyanka Kothari : கொல்கத்தாவில் பிறந்து, கோலிவுட் திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமாகி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல படங்களில் நடித்து வருபவர் தான் பிரியங்கா கோத்தாரி.

JJ Movie
கடந்த 1983 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த நடிகை பிரியங்கா கோத்தாரி, தனது 20வது வயது முதல் நடித்து வருகிறார். அவர் கலை உலகில் முதல் முதலில் அறிமுகமானது மாதவனின் "ஜே ஜே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது.
Priyanka
தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்றளவும் நடித்து வரும் நடிகை பிரியங்கா கோத்தாரி, தொழிலதிபர் பாஸ்கர் பிரகாஷ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Priyanka kothari
ஜே ஜே படத்திற்கு பிறகு நாயகியாக அவர் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு திருமணமான பிறகு அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Actress Priyanka kothari
இப்போதும் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் பயணித்து வருகின்றார் பிரியங்கா கோத்தாரி. ஜே ஜே படத்தில் அவர் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பது, அந்த படம் அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகளையும் கொடுத்தது.