Asianet News TamilAsianet News Tamil

போதை பொருள் கடத்தல் விவகாரம்.. இது தான் என் நிலைப்பாடு.. இயக்குனர் அமீர் மீண்டும் விளக்கம்..

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து இயக்குனர் அமீர் மீண்டும் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

Director Ameer issues clarification about producer jaffer sadiq arrest in latest video Rya
Author
First Published Mar 1, 2024, 9:57 AM IST

கடந்த வாரம் தெற்கு டெல்லியில் 2 போதை பொருள் குடோனில் சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.2000 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஜாபர் சாதிக் சென்னை மேற்கு மாவட்ட அயலக் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்த உடனேயே ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் மங்கை, அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப்பெரியவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார். இதனால் இயக்குனர் அமீர் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் 'த்ரிஷ்யம்'! அட இந்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்பெஷலா..? குவியும் வாழ்த்துக்கள்!

இந்த நிலையில் இயக்குனர் அமீர் இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “ செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.. சட்ட விரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் அமீர் மீதான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை. சமூக வலைதளங்களில் போதைப் பொருள் வழக்கில் அமீர் கைது செய்யப்பட உள்ளதாகவும் சிலர் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

அப்போ அது படத்தோட ப்ரோமோ இல்லையா? சிம்பு வெளியிட்டு வைரலான வீடியோ - இறுதியில் ரசிகர்களுக்கு மிஞ்சிய ஏமாற்றம்!

இந்த சூழலில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர் “ என்னுடையை ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக விளக்கிய பிறகும் சிலர் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் குற்றச்செயல்களுடன் என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. பொதுவாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களை எதிரான சித்தாந்தத்தை பின்பற்றுவன் நான். 

இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமே தவிர, எனது குடும்பத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்துமே தவிர வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்துவிட முடியாது. நீங்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறையினர் இருக்கின்றனர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்.. இந்த சோதனையான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவளத்த, என்னுடன் துணை நிற்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios