Asianet News TamilAsianet News Tamil

எளிமையாக நடந்த இயக்குனர் அமீர் மகள் திருமண விழா! வெற்றிமாறன்,  ஆர்யா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு

இயக்குனரும், நடிகருமான அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது.

Director Ameer daughter wedding ceremony was simple! Vetrimaran, Arya and other actors from the film world participated sgb
Author
First Published Jun 23, 2024, 5:34 PM IST

மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குனர் அமீர் மகள் திருமண விழாவில் இயக்குநர் வெற்றிமாறன்,  நடிகர் ஆர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் சேரன் , வெற்றிமாறன்,  சசிகுமார் , சமுத்திரக்கனி , சரவணன் , கரு.பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன் , சுப்பிரமணியம் சிவா  மற்றும் நடிகர்கள் ஆர்யா , பொன்வண்ணன் , கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள்  பங்கேற்றனர். 

திருமண விழாவிற்கு வருகை தந்த திரையுலகத்தினரை இயக்குனர் அமீர் ஆரத் தழுவி வரவேற்றார் 

எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் இயக்குனர் அமீர் மணமகனிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்ட பின்பாக திருமணம் நடைபெற்றது 

அப்போது மண்டபத்தில் கூடியிருந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் திருமணம் நடைபெற்றதையடுத்து கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் 

திருமணம் நடைபெற்ற பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் (துஆ) வின் போது மணமக்கள் நீடுழி வாழவேண்டி இயக்குனர் சமுத்திரக்கனி மனமுருக கைகூப்பி வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார் 

இதனைத் தொடர்ந்து மணமகனோடு சேர்ந்து திரையுலகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் எளிமையாக நடைபெற்ற இந்த இந்த திருமண விழாவில் திருமணத்திற்கு வந்தவர்களிடம் இருந்து மணமக்கள் எந்த பரிசு பொருட்களும் மற்றும் மொய்ப்பணம் உள்ளிட்டவைகளை வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios