தல அஜித்தை வம்பிழுக்கும் அல்போன்ஸ்.. இவருக்கு இப்போ என்ன தான் ஆச்சு? கடுப்பில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Alphonse Puthran : பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்த சில இன்ஸ்டாகிராம் பதிவுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல. தற்பொழுது அவர் தல அஜித் அவர்களுடைய அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.
நேற்று டிசம்பர் 28ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், பிரபல மூத்த தமிழ் திரையுலக நடிகருமான விஜயகாந்த் அவர்கள் காலமானார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் அவருக்கு தொடர்ச்சியாக தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் அமைச்சர் உதயநிதி அவர்களை டேக் செய்து சில அதிர்ச்சி தரும் விஷயங்களை கூறினார். அதில் "உதயநிதி அண்ணா இதற்கு முன்பாக கேரளாவில் இருந்து ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நான் வந்த பொழுது, அங்கு உங்களை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தினேன். மேலும் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொண்டேன்".
கொரோனா நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கிய கேப்டன்.. வீடியோ மூலம் இரங்கல் - எமோஷனல் ஆனா யோகி பாபு!
"அதேபோல இந்தியன் 2 படபிடிப்பில் கமலஹாசன் அவர்களை கொலை செய்ய முயற்சிகளில் நடந்திருக்கின்றன என்பதையும் நான் உங்களிடம் கூறினேன். இப்பொழுது விஜயகாந்த் அவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளார். இனியும் நீங்கள் காலதாமதம் செய்தால் அடுத்து நீங்கள் தான் டார்கெட். ஆகவே விரைந்து செயல்படுங்கள்" என்று பகீர் கிளப்பும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் முன்வைத்து வந்த நிலையில் தற்பொழுது தல அஜித் அஜித் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி ஒரு பதிவை போட்டுள்ளார். நேற்று வெளியிட்ட அந்த பதிவில் "இந்த பதிவு தல அஜித் குமார் சார் அவர்களுக்கு தான், நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா ஆகியோரிடம் இருந்து நீங்கள் அரசியலுக்குள் நுழைய இருப்பதாக கேள்விப்பட்டேன். பிரேமம் படத்தை பார்த்த உங்களுடைய மகள் அனுஷ்கா நிவின் பாலி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது நீங்கள் அவரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து பேசியது எனக்கு தெரியும்".
"இதுவரை நீங்கள் பொதுவெளிலோ அல்லது அரசியல் முன்னெடுப்புகளிலோ கலந்து கொண்டதில்லை. நீங்கள் என்னிடம் பொய் சொல்லி விட்டீர்களா? அல்லது மறந்து விட்டீர்களா? அல்லது யாரும் உங்களுக்கு எதிராக நிற்கிறார்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் மேலே கூறிய இந்த மூன்று விஷயங்களும் இல்லை என்றால் நீங்கள் பகிரங்கமாக ஒரு கடிதத்தின் மூலம் எனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்".
"ஏனென்றால் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன், மக்களும் உங்களை நம்புகிறார்கள்" என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். இதை கண்ட பல ரசிகர்கள் உண்மையில் இவருக்கு இப்பொழுது ஒரு நல்ல சிகிச்சை தேவைப்படுகிறது. ஏன் இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்று அல்போன்ஸ் புத்திரன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.