கண்டிப்பாக பிக்பாஸ் பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தவர் தர்ஷன். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணமாக, திடீர் என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் தர்ஷனின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தர்ஷன் வெளியேற முக்கிய காரணம் ஷெரின் தான் என,  தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா கூறினார். அதுவும் நான் உள்ளே இருந்தபோது சொன்னது மக்களுக்கு புரியவில்லை. நான் வெளியே சென்றதும் தான் புரிந்தது. அதனால் தான் வெற்றி தர்ஷன் வெளியேறியதாக கூறினார்.

இதை கேட்டதும் ஷெரின், தேம்பி தேம்பி அழுதது அனைவருக்குமே மன கஷ்டத்தை ஏற்படுத்தியது.  சாக்ஷி, லாஸ்லியா உள்ளிட்ட பலர் ஷெரீனுக்கு ஆதரவு கூறிய போதும், நான் தான் தர்ஷன் வெளியேற காரணமா?  என்கிற குற்ற உணர்வில் அழுதபடியே இருந்தார் ஷெரின்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்துள்ள, தர்ஷன் வனிதா கூறியதை நினைத்து கவலை பட வேண்டாம். அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை என, தெரிவித்துள்ளார்.மேலும் யார் சொல்வதையும் நம்பாதே என ஷெரினிடம் தர்ஷன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.