இந்நிலையில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D44 படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த "பட்டாஸ்" திரைப்படமும், மாமனாரின் தர்பார் படத்தோடு போட்டி போட்டு நல்ல கலெக்‌ஷன் செய்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred



அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.