நடிகர் தனுஷ், தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கடந்து இரு தினங்களுக்கு முன் கொண்டாடி மகிழ்ந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக வீட்டில் குடும்பத்துடன் மிகவும் எளிமையாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் இவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும், இவருடைய மனைவி ஐஸ்வர்யா வெளியிட்டு கணவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பல பிரபலங்கள், ரசிகர்கள் என தனுஷுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து  ரக்கிட  ரக்கிட  பாடல் வெளியானது. கர்ணன் படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியானது. இவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் மற்றும் இன்றி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்: நாயகி சீரியலில் இருந்து விலகியது உண்மையா? என்ன காரணம்... நடிகர் வித்யா பிரதீப் வெளியிட்ட தகவல்!
 

இதற்க்கு நன்றி சொல்லும் விதமாக, நடிகர் தனுஷ் மிகவும் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில் கூறியுள்ளதாவது. "என்‌ ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... உங்கள்‌ அன்பால்‌ திக்குமுக்காடிப்‌ போய்விட்டேன்‌.

அனைத்து காமன் டிபிக்கள்‌, மாஷ் அப்க்கள்‌, வீடியோக்கள்‌, மூன்று மாதங்களாக நீங்கள்‌ செய்து வந்த கவுண்ட் டவுன் டிசைன்கள்‌ அனைத்தையுமே என்னால்‌ முடிந்தவரை பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்‌.
மிக்க மிக்க நன்றி .

மேலும் செய்திகள்: எனக்கொரு தலைவன் பிறந்திருக்கிறான்... குழந்தை பிறந்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நடிகர் ரமேஷ் திலக்!
 

அதையும்‌ தாண்டி நீங்கள்‌ செய்த அத்தனை நற்பணிகளையும்‌ கண்டு நெகிழ்ந்த நான்‌, உங்களால்‌ கர்வம்‌ கொள்கிறேன்‌, பெருமைப்படுகின்றேன்‌!

மேலும்‌ எனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்‌, பத்திரிக்கை மூலமாகவும்‌, சமூக வலைத்தளங்கள்‌ வழியாகவும்‌ வாழ்த்துக்கள்‌ தெரிவித்த திரைத்துறையினர்‌, சமூக ஆர்வலர்கள்‌, அரசியல்‌ பெருமக்கள்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ பண்பலை, ஊடகம்‌, தொலைக்காட்சி அன்பர்களுக்கும்‌, என்‌ நலன்‌ விரும்பிகளுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த வணக்கத்தையும்‌,நன்றியையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌". என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: தொகுப்பாளினி அர்ச்சனாவின் கியூட்டான வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!
 

இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.