பிரபல வானொலி தொகுப்பாளராக இருந்து, பின் நடிகராக மாறிய ரமேஷ் திலக், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்.ஜே. நாவலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை கூறியுள்ளார்.

'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்து, பின்... நடிகர் தனுஷ் ஹன்சிகா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'மாப்பிள்ளை' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரமேஷ் திலக்.

வெள்ளித்திரையில் நடித்தே தீர வேண்டும் என விடாமுயற்சியுடன், இருந்த ரமேஷ் திலக்கிற்கு, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், டிமான்டி காலனி, காக்கா முட்டை போன்ற படங்கள் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் செய்திகள்: தொகுப்பாளினி அர்ச்சனாவின் கியூட்டான வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!
 

பின்னர், தன்னுடன் ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த நாவலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாவலக்ஷ்மி தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ரமேஷ் திலக், ட்விட்டர் பக்கத்தில் எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ரமேஷ் திலக் தற்போது மாஸ்டர் பட உட்பட, அடுக்கடுக்காக நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.