இயக்குனர் கௌதம் மேனன் படங்கள் என்றாலே பாடல்கள் முதல் ஒரு ஒரு ஷாட்களும் கிளஸ்ஸாக இருக்கும். இதுவே அவர் படத்தின் பலம் என்று கூட சொல்லலாம்.

அதே போல பாடல்களும் தனி தன்மையோடு இருக்கும் அப்படித்தான் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் வந்த தள்ளிப்போகாதே பாடலை தொடர்ந்து தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வரும் மறுவார்த்தை பேசாதே பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த பாடல் வெளிவந்த 24 மணி நேரத்தில் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, மேலும், 40 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் குறைந்த நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய பாடல் என்று பெருமையை இது பெறுகின்றது.