Asianet News TamilAsianet News Tamil

190 நாடுகள்... 17 மொழி... ஒரே சுருளி..! தனுஷின் மாஸான போஸ்டரை வெளியிட்ட 'ஜகமே தந்திரம்' படக்குழு..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம், இன்னும் 3 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
 

dhanush jagame thanthiram movie poster released
Author
Chennai, First Published Jun 15, 2021, 12:34 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம், இன்னும் 3 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால்,   இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசாகும் போதே ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கும் அதே அளவிலான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

dhanush jagame thanthiram movie poster released

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ட்ரைலரின் ஒவ்வொரு காட்சிகளிலும், அதிரடி காட்சிகளும், பச் வசனங்களில் தனுஷ் தூள் கிளப்பி இருந்தது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்தது. அதே போல், இதுவரை பார்த்திடாத தனுஷையும் கண் முன் நிறுத்திய கார்த்தி சுப்புராஜையும் தனுஷ் ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து தள்ளினர்.

dhanush jagame thanthiram movie poster released

'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், படக்குழு தற்போது தனுஷ் வேஷ்டி சட்டையில் கெத்தாக அமர்ந்திருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 190 நாடுகள், 17 மொழிகள், ஒரே சுருளி என அறிவித்து எந்தெந்த மொழிகளில் வெளியாக உள்ளதோ அது குறித்த முழு விவரமும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

dhanush jagame thanthiram movie poster released

 கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios