Naane Varuven FDFS : திருச்சிற்றம்பலம் படத்தை போன்று நானே வருவேன் படத்துக்கு காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை இந்துஜா, மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லிரம் ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இதற்கு முன் ரிலீசான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், நானே வருவேன் படமும் அந்த அளவு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நானே வருவேன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... மஹாலட்சுமி - ரவீந்தர் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த புதுமண தம்பதி..!

Scroll to load tweet…

வழக்கமாக தனுஷ் படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவர் நடிப்பில் ரிலீசான படங்களுக்கு 4 மணி காட்சி திரையிடப்படவில்லை. திருச்சிற்றம்பலம் படத்தை போன்று நானே வருவேன் படத்துக்கு காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் ஆடிப்பாடி கொண்டாடினர்.

Scroll to load tweet…

அதேபோல் தியேட்டர் முன் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ஆரவாரமாய் கொண்டாடினர். இப்படத்துக்கு பெரியளவில் புரமோஷன் செய்யப்படவில்லை என்பதால், வரவேற்பும் குறைந்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷ் ரசிகர்கள் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சிங்கப்பெண்ணின் சிம்பிள் திருமணம்... காதலனை கரம்பிடித்தார் பிகில் பட நடிகை - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்