பூரித்து போன தனுஷ்..! ரசிகர்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதி சர்ப்ரைஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகனும், ஹாலிவுட் வரை சென்று இண்டஸ்ட்ரியில் தனக்கென தனி இடம் தக்க வைத்துள்ள நடிகர் தனுஷ் நேற்று தனது 36 ஆவது பிறந்த நாளை  கொண்டாடினார்.

துள்ளுவதோ இளமை, ஆடுகளம், மாரி உள்ளிட்ட  பல வெற்றி படங்களை தந்துள்ள நடிகர் தனுஷுக்கு நேற்று உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தனர். 

அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நன்றி மடலை வெளியிட்டு உள்ளார் தனுஷ் அதில்,

"எனக்கு என்ன வார்த்தை சொல்லி தொடங்குவதே என தெரியவில்லை.. என்னுடைய பிறந்தநாளுக்கு அந்த அளவிற்கு அன்பும் பாசத்தையும் பொழிந்து விட்டீர்கள்... உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.. நேற்றைய தினம் உங்களுடைய வாழ்த்துக்களால் மிக சிறந்த நாளாக உணர்ந்தேன். இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 
உங்களுடைய வாழ்த்து எனக்கு மேலும் பல உற்சாகத்தை கொடுத்துள்ளது.

உங்களுடைய எல்லையற்ற என் மீதான அன்பு எப்போதும் எனக்கு வேண்டும்.. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்... என் வெற்றிக்கு தூணாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி என தெரிவித்துள்ளார். மற்றும் ஊடகவியலாளருக்கு என்னுடைய நன்றிகள் என குறிப்பிட்டு உள்ளார் நடிகர் தனுஷ்