2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்களின் மரணங்கள் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஓட்டுமொத்த திரையுலகை உலுக்கியது. அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மரணமடைந்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

தனுஷ், சாயா சிங் நடிப்பில் வெளியான திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன், துஷ்யந்தின் மச்சி, விக்ரம், சினேகா நடிப்பில் வெளியான கிங் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அதில் தனுஷிற்கு திருடா திருடி, சிம்புவிற்கு மன்மதன் ஆகிய திரைப்படங்கள் அவர்களுடைய கேரியருக்கு முக்கிய திருப்பமாக அமைந்த திரைப்படங்கள். வசூல் ரீதியாகவும் இரு படங்களும் சூப்பர் ஹிட்டானது. 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இதுபோன்று பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவுக்கு 10.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.