சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

DD Next Level - டிடி நெக்ஸ்ட் லெவல் 

‘தில்லுக்குதுட்டு’, ‘டிடி ரிட்டன்ஸ்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த திரைப்படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. நடிகர் ஆர்யா தயாரித்திருந்த இந்த படத்தை, பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். சந்தானத்துடன் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், gகஸ்தூரி ஆகிய பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான பேய்ப்படம்

அனைத்து படங்களுக்கும் கடுமையான விமர்சனங்களை வழங்கும் திரை விமர்சகர்ளை திரையரங்குக்குள் பேய் ஒன்று மாட்ட வைக்கிறது. அதன் பின் என்ன நடந்தது? அந்த திரை விமர்சகர் தப்பித்தாரா என்பது தான் இந்த படத்தின் கதை. வழக்கமான பேய் படம் போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. சந்தானம் நடிப்பில் வெளியாகியிருந்த ‘டிடி ரிட்டன்ஸ்’ அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. மொட்டை ராஜேந்திரன், சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஓடிடியில் வெளியாகும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’

இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படம் வருகிற ஜூன் 13ஆம் தேதி ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…